கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் | தினகரன்

கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல்-10 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமானது. உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 


Add new comment

Or log in with...