1st Test - Day 03: 498 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா (UPDATE) | தினகரன்

1st Test - Day 03: 498 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா (UPDATE)

 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 3 விக்கெட் இழற்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
விராத் கோலி ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
 
அந்த வகையில், இலங்கை அணியை விட இந்திய அணி 498 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆட்டமிழந்தோர்
அபிநவ் முகுந்த் 81
சித்தேஸ்வர் புஜாரா 15
சிக்கர் தவான் 14
 

1st Test - Day 03:மழையினால் போட்டி இடைநிறுத்தம் (UPDATE)

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
போட்டி இடைநிறுத்தப்படும்போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
ஏற்கனவே 309 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, தற்போது இலங்கை அணியிலும் பார்க்க மொத்தமாக 365 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அபிநவ் முகுந்த் 27*
 
சிதேஷ்வர் புஜாரா 15
சிகர் தவான் 14
 
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 600 
இலங்கை 291 
 
தில்ருவன் பெரேரா 1/20
லஹிரு குமார 1/9
 

 

1st Test - Day 03:309 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை ஆட்டமிழப்பு

காலியில் இடம்பெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல (09) விக்கெட்டுகளையும் இழந்து (அசேல குணரத்ன காயம் காரணமாக விளையாடவில்லை) 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
நேற்று முன்தினம் (26) ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய தனது முதல் இன்னிங்சில் 600 ஓட்டங்களை பெற்றது.
 
தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய நாள் நிறைவடையும் போது 44 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, பகல் போசன இடைவேளையை அடுத்து வீசிய இருவர்களில் 291 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றார்.
 
அந்த வகையில், இலங்கை அணி, இந்திய அணியிலும் பார்க்க 309 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தற்போது, தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 600 
இலங்கை 291 
 
தில்ருவன் பெரேரா 92*
அஞ்சலோ மெத்திவ்ஸ் 83
உபுல் தரங்க 64
 
ரவீந்திர ஜடேஜா 3/67
மொஹமட் சமி 2/45
 

Add new comment

Or log in with...