அரசை கவிழ்க்க முன்னெடுக்கும் எந்த வேலைநிறுத்தங்களுக்கும் அஞ்சப் போவதில்லை

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் எத்தகைய வேலை நிறுத்தங்களுக்கும் பயப்படப் போவதில்லை. எத்தகைய தடைகள் வந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் தொடரும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

நான் சுகாதார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சுகாதாரத்துறையில் ஏற்பட்டிருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தேன். தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசு அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் போது சுகாதார ஊழியர்களுக்கும் மேலும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அதேபோல அரசாங்க மருத்துவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்தோம். சுகாதார ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை 2016ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதியிலிருந்து மேலதிக நேரக்கொடுப்பனவாக வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 11 வருடங்களின் பின்னரே சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதுவரை அன்றைய அரசு வெறுமனே கொடுப்பணவை மட்டுமே வழங்கி வந்தது. நல்லாட்சி அரசாங்கம் சகல துறைகளும் உள்ளடங்கும் விதத்தில் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தது. இவ்வாறு செயற்பட்ட எமது நல்லாட்சி அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் வருகின்றன.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காலி முகத்திடலில் மேதினத்தை கொண்டாடியது. இது அன்று அவர்கள் சம்பாதித்த பணத்திலேயே இதனைக் கொண்டாடினார்கள். அவர்கள் வைப்பு அனைத்தும் டுபாய், ஹொங்ஹொங் ஆகிய நாடுகளிலேயே உள்ளன. அந்த கணக்குகளையும், பணத்தையும் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். அவற்றை நாங்கள் உறுத்திப்படுத்த வேண்டும் அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் விரைவில் முன்னெடுப்போம். அதற்கு முன்னதாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. ஊழல், மோசடி விசாரணைகளை முடக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். அரசுக்கு எதிரான வேலை நிறுத்தங்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

இலவச சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்பாவி நோயாளர்களின் நன்மைகருதியே இவை அனைத்தும் செய்யப்பட்டன. தொற்றா நோய்களினால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இவை முன்னெடுக்கப்பட்டன. செய்து முடித்த சேவையை பணத்தைக்கொண்டு அறவிட முடியாது.

அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பதாக முன்னாள் ஜனாதிபதி மேதினக் கூட்டத்தில் தெரிவித்தார். காலி முகத்திடலுக்கு தெற்கே அவரால் விற்கப்பட்ட துறைமுக நகரம் இருக்கிறது. அடுத்த பக்கம் அவரால் விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் கட்டுமானங்கள் தென்படுகின்றன. இவை அனைத்தும் அவருக்கு தென்படவில்லை. அவருக்கு மறதி ஏற்பட்டுவிட்டது. அந்தக் காணிகளை நாங்கள் 99 வரு குத்தைகையின் அடிப்படையிலேயே வழங்கி இருக்கிறோம். எமக்கு வருகின்ற தடைகளையும் அழுத்தங்களையும் மீறி அவற்றை உடைத்தெறிந்து படிப்படியாக நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
12 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...