இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை | தினகரன்

இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

 

* பதுக்க​ைல தடுக்க சுற்றிவளைப்புகள்
* சகோதரருக்கு உதவ ஜனாதிபதி கேட்கவில்லை

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். ஜனாதிபதி இது குறித்து விரைவில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்வாரென்றும் அவர் தெரிவித்தார்.

அரிசி இறக்குமதிக்கான கேள்விமனு கோரும் நடவடிக்கைகள் நேற்று(03) ஆரம்பமானது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார்.

இதேவேளை, நெல் விநியோகத்தை முறையாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளாரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது சகோதரர்களுக்கு உதவுமாறு அவர் என்னிடமோ அல்லது அமைச்சின் செயலாளர்களிடமோ கூறியதில்லை என்றும் அமைச்சர் உறுதியாக கூறினார்.

நெல் விநியோகத்தில் மோசடிகளை ஏற்படுத்தும் மாபியாவின் பின்னணில் அரிசி ஆலை உரிமையாளர்கள் இருப்பதாகவும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.

முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் 107 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இதுவரை 52 ஆயிரம் மெட்ரிக்தொன் நெல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டால் உள்நாட்டு அரிசியின் விலை இயல்பாகவே குறைவடைவதுடன் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசியும் தானாகவே சந்தைக்கு வரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

தற்போது களஞ்சியசாலையில் 02 இலட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக்ெதான் அரிசி இருப்பதாகவும் அதில் 50 ஆயிரம் மெட்ரிக்ெதான் அரிசியை கையிருப்பில் வைத்துக்ெகாண்டு ஏனையவை விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது:

நெல் கொள்வனவு முறையில் மோசடி இடம்பெறுவதனால் அதற்கு அஞ்சியே நான் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக எதிர்க் கட்சியினர் என் மீது குற்றம்சாட்டியுள்ளனர். நான் பயந்து நாட்டை விட்டுச் செல்லவில்லை. எந்தவொரு பிரச்சினைக்கும் முகம் கொடுக்க தயாராக இருக்கின்றேன். இந்த அரசாங்கத்திலேயே முதற்தடவையாக கேள்விபத்திரம் அடிப்படையில் அரிசி ஆலை உற்பத்தியாளர்களிடம் நெல் வழங்கப்படுகின்றது.

கடந்த வருடம் சிறியது முதல் பெரியது வரை 138 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் வழங்கப்பட்டது. எனினும் சுமார் 20 அரிசி ஆலை உரிமையாளர்களே நெல்லுக்கான அரிசியினை சதோசவுக்கு திருப்பி வழங்கினர். ஏனையோர் தாமே அந்த அரிசியை நல்ல விலைக்கு விற்றதன் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றினர். இது தொடர்பில் 30 ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நேர்மையான முறையில் செயலாற்றதன் காரணமாகவே நாம் கேள்விபத்திரம் கோர ​வேண்டியுள்ளது.

கேள்வி பத்திரம் முன்வைப்போர் உண்மையில் அரிசி ஆலை வைத்துள்ளனரா என்பதனை நாம் பிரதேச செயலாளர் மட்டத்தில் உறுதி செய்த பின்னரே அவரை பட்டியலில் சேர்த்துக்ெகாள்கின்றோம். அதனடிப்படையில் தற்போது 307 பேர் பதிவாகியுள்ளனர். ஏற்கனவே நியாயமற்ற முறையில் செயற்பட்டவர்கள் மற்றும் குற்றம் குறைகள் உள்ளவர்களை நாம் உடனடியாக பட்டியலில் இருந்து அகற்றியுள்ளோம்.

அதேபோன்று ஏதேனும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்துக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் ஆதாரத்துடன் எமக்கு அறியத் தாருங்கள். அவ்வாறானவர்களுக்கு எதிராக நாம் உடனடி நடவடிக்ைக எடுப்போம்.

நெல் கொள்வனவு சபையானது 7 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டத்துடனேயே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.அதற்கு எதிராக நான் சட்ட நடவடிக்ைக எடுப்பேன் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...