Monday, June 17, 2024
Home » IIADS இன் பொதுச் செயலாளராக கிர்பி டி லானெரோல் நியமனம்

IIADS இன் பொதுச் செயலாளராக கிர்பி டி லானெரோல் நியமனம்

by Rizwan Segu Mohideen
May 25, 2024 8:06 pm 0 comment

இந்திய தேசிய அப்போஸ்தலிக்க மறை மாவட்ட (INA) நிர்வாகத்தின் கீழுள்ள சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறை மாவட்ட ஆயர் (IIADS) கிர்பி டி லானெரோல் (Kirby de Lanerolle) அதன் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசியாவிலுள்ள சுமார் 11,000 தேவாலயங்களுக்கான ஆன்மிக வழிநடத்தல்களை அவரிடம் ஒப்படைக்கப்படுவதாக அமைந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஆயர் கிர்பி டி லானெரோல் அவரது மனைவி ஃபியோனாவுடன் (Fiona) இணைந்து ஆன்மிக பணியை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் கொழும்பில் WOWlife எனும் தேவாலயத்தை அமைத்து அதன் மூலமாக அவர்கள் இருவரும் ஆன்மிக பணியை முன்னெடுத்து வருகின்றனர். அவர் இலங்கையில் இன, மத ரீதியாக சிறுபான்மை சமூகங்களுக்குள் மத நல்லிணக்கத்தை வழங்கியுள்ளதுடன், அவரது ஆன்மிக பணியை பாராட்டி தேசிய விருதுகளுக்கும் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆயர் கிர்பியினுடைய தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமைத்துவ பண்புகளால் உலகளாவிய திருச்சபையின் பொதுச் செயலாளராக இருந்து ஆன்மிக பணியை தொடர்ந்து முன்னெடுக்க வழிவகுக்குமென, INA மறை மாவட்டம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT