Monday, May 20, 2024
Home » தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1700 ரூபாவாக உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1700 ரூபாவாக உயர்வு

ஜனாதிபதிக்கு சதீக் முப்தி நன்றி தெரிவிப்பு

by Gayan Abeykoon
May 10, 2024 7:00 am 0 comment

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக‌ உய‌ர்த்திய‌மைக்காக‌ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பல தசாப்த காலமாக லயன்களின் வாழும் தோட்ட‌த் தொழிலாளர்கள் 700 ரூபா சம்பளத்தை பெற்று மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் தமது குடும்பத்தை வழிநடத்தி வந்தார்கள். அதேபோன்று ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அங்கு வந்து 700 ரூபா சம்பளத்தை 1700 ரூபாவாக கூட்டித் தருகின்றோம் என்று போலி வாக்குறுதிகளை கொடுத்து அம்மக்களின் வாக்குப் பலன்களை பெற்று அரசியல் அதிகாரம் அடைந்ததும் அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் கடந்த காலங்களாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அதிகாரம் இருந்தும் இதற்கு எந்த வித தீர்வும் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் வெறுமனே வாக்குறுதிகளாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மலையகத்துக்கு சென்ற ஜனாதிபதி, தோட்ட‌த் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறி, உடனடியாக கொழும்புக்கு வந்து கம்பெனிகளுடன் கதைத்து அதற்குரிய தகுந்த தீர்வை பெற்றுக் கொடுத்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT