Monday, May 20, 2024
Home » கடலோரப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் 18ஆம் நாள் நடைபயணம்

கடலோரப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் 18ஆம் நாள் நடைபயணம்

by Gayan Abeykoon
May 10, 2024 7:32 am 0 comment

இலங்கையின் கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு அம்பாறை, சென்றல் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் செல்டன் பெரேரா தனது 18வது நாள் நடைபயணத்தை புத்தளத்திலிருந்து சிலாபம் வரை நேற்று (09) ஆரம்பித்துள்ளார்.

கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும் இந்த பயணத்தின் நோக்கம் ஆகும் என அவர் கூறினார்.

அத்தோடு, மணிக்கு 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்வதாகவும், இந்த பயணத்தில் மூவின மக்களும் தனக்கு நல்ல ஒத்துழைப்புக்ளை தருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கரையோர பகுதியை 52 நாட்களில் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு எவருடைய அனுசரணையையும் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி அம்பாறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இவர், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து நேற்று (09) புத்தளத்தில் இருந்து தனது பயணத்தை கொழும்பை நோக்கி ஆரம்பித்தார்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT