தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற தாதி கைது செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான வினிஷா தி நகரில் உள்ள விடுதியில் தங்கி கடந்த ஓராண்டாக அங்கு இருக்கக்கூடிய தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றி வந்தார்.
சென்னையில் பணியாற்றி வந்த செல்வமணி என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு ஏழு மாதங்களாக கர்ப்பமாகி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி வினிஷாவிற்கு வயிற்று வலி அதிகமான நிலையில் விடுதியில் அவரே குழந்தையின் இரு கால்களையும் வெட்டி எடுத்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது.
பின்னர் அவரே எழும்பூர் குழுந்தைகள் நல வைத்தியசாலையில் சிகிச்சைகாக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சைளிக்கப்பட்டு வந்தது.
மேலும் வைத்தியசாலை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் பொலிஸார் பிறந்த குழந்தை இறக்கச் செய்தல் அல்லது இறந்து பிறக்கச் செய்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வினிஷா எழும்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மாம்பலம் பொலிஸார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.