Home » கண்டலடிஊற்று கரையோர பகுதியில் கண்டல் தாவரம் நடுகை

கண்டலடிஊற்று கரையோர பகுதியில் கண்டல் தாவரம் நடுகை

by Gayan Abeykoon
May 1, 2024 7:52 am 0 comment

திருகோணமலையின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கண்டலடிஊற்று கரையோரப் பகுதியில் கண்டல் தாவரம் நடும் திட்டம்  அல்  றவ்ழா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பை கட்டுப்படுத்தி கரையோரத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கண்டல் தாவர நடுகை  திட்டமானது, கண்டலடிஊற்று அல்  றவ்ழா பாடசாலைக்கு முன்பாகவுள்ள கரையோரப் பகுதியில் கடந்த 25ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இந்த நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனமான பெரண்டினா மற்றும் HSBC வங்கி நிதி உதவி வழங்கியுள்ளது.   இதற்கான ஆரம்ப  நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலளார் எம்.எச்.எம்.கனி, கிண்ணியா நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ், இளைஞர் சேவை அதிகாரி ஏ.டபிள்யூ.எம்.ஜிப்ரி, கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் என்.நுஸ்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT