Friday, May 17, 2024
Home » நாட்டின் பல பகுதிகளிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

- ஒரு சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
April 30, 2024 7:48 am 0 comment

– இடியுடன் மழைக்கும் சாத்தியம்

உலகின் வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம் (அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம்) நாட்டின் வானிலையைப் பாதித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT