Sunday, September 8, 2024
Home » சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

- சபை அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க பாராளுமன்றம் அனுமதி

by Prashahini
April 25, 2024 4:01 pm 0 comment

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (24) எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

91 வயதாகும் இரா.சம்பந்தன் தற்போது சுகயீனமுற்றிருக்கும் நிலையிலேயே அவருக்கு மேலும் 3 மாதகாலம் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி முன்மொழிந்தார்.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவழித்தமைக்கு அமைய இரா. சம்பந்தனுக்கு மேலும் 3 மாதகால விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x