Saturday, May 4, 2024
Home » அமெரிக்காவில் ‘தடை’யை நெருங்கும் டிக்டொக் செயலி

அமெரிக்காவில் ‘தடை’யை நெருங்கும் டிக்டொக் செயலி

by damith
April 22, 2024 3:18 pm 0 comment

சீனாவைச் சேர்ந்த அதிக பிரபலமான டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த சனிக்கிழமை (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

இதன்படி டிக்டொக் சீன தாய் நிறுவனமான பைடான்ஸை மாற்றிக்கொள்ளாவிட்டால் அமெரிக்க சந்தையில் தடைக்கு உள்ளாகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சீனா உளவு பார்ப்பதற்கு டிக்டொக் உதவுவதாக அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டு வருகின்றனர். இந்த செயலி அமெரிக்காவில் 170 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் 170 மில்லியன் அமெரிக்கர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாகவும் 7 மில்லியன் வர்த்தகங்களை அழிப்பதாகவும் டிக்டொக் குறிப்பிட்டுள்ளது. இந்த செயலி அமெரிக்க பொருளாதாரத்துக்கு வருடத்திற்கு 24 பில்லியன் டொலர் பங்களிப்புச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் திட்டம் நாளை (23) செனட் சபையில் வாக்கெடுக்கு வரவுள்ளது. தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டதும் டிக்டொக் தடை சட்டமாக வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT