Friday, May 3, 2024
Home » புத்தளத்தில் எதிர்வரும் சனிக்கிழமை ஊடகச் செயலமர்வு, விருதுவழங்கும் விழா

புத்தளத்தில் எதிர்வரும் சனிக்கிழமை ஊடகச் செயலமர்வு, விருதுவழங்கும் விழா

LACSDO MEDIA NETWORK SRI LANKA ஏற்பாடு

by gayan
April 20, 2024 7:00 am 0 comment

தினகரன் உட்பட ஊடக நிறுவனங்கள் அனுசரணை

LACSDO MEDIA NETWORK SRI LANKA இன் திறமைமிக்கவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கும் விழாவும் ஊடகச் செயலமர்வும் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 09 மணிக்கு ஆரம்பமாகின்றன. ஊடகச் செயலமர்வு காலையில் நடைபெறும்.விருது வழங்கும் நிகழ்வு பி.ப 04 மணிக்கு நடைபெறும். புத்தளத்தில் உள்ள பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இவ்விழாவுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகள் மற்றும் கெபிட்டல் வானொலி, கெபிட்டல் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் ஊடக அனுசரனைகளை வழங்கவுள்ளன.

LACSDO MEDIA தலைவர் கலாநிதி ஏ.எல். அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் கலந்து கொள்ளவுள்ளார்.

புத்தளம் முன்னாள் நகரசபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக், ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ஜூவைரியா மொஹிடீன், டொக்டர் றியாஸ் சுலைமான்லெப்பை, தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், எம்.ஆர்.எப் றியாசா, வை.எம். சப்ராஸ், எம்.எப். பாத்திமா ஹசித்தா, புத்தளம் முன்னாள் நகரசபை உறுப்பினர் பிஸ்லியா பூட்டோ ஆகியோருடன் சமூகசேவை ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

27 ஏப்ரல் 2024 காலை 08. மணி முதல் 01.00 மணிவரை ஊடகச் செயலமர்வுகள் நடைபெறும். இச்செயலமர்வில் கெபிட்டல் ஊடக நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் எம்.எப். சியால்ஹூல் ஹசன், ஐ.ரீ.என். ஊடக நிறுவனத்தின் வசந்தம் தமிழ் தொலைக்காட்சியின் தலைமை முகாமையாளர் இர்பான் மொஹமட், ஊடக வளவாளர் எம். றிசாத் சரிப், லக்ஸ்டோ ஊடக நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.ஆர். அனஸார் பங்கேற்கின்றனர். வீடியோ, மற்றும் புகைப்படக் கருவிகளை இயக்குதல் சம்பந்தமான செயல்முறைப் பயிற்சியை சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத் உட்பட பலர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு வழங்குவர்.

பி.பகல். 04 மணிமுதல் 07 மணிவரை நடைபெறவுள்ள விருது விழாவில் வரவேற்புரையை விஸ்லியா பூட்டோ ஆற்றுவார். சிறப்புரையை சியாஹூல் ஹசன், விசேட பேச்சை றிசாட் ஷெரீப் ஆற்றுவர்.

ஏற்கனவே இந்நிறுவனத்தினால் ஊடகப் பயிற்சியும் விருது வழங்கும் நிகழ்வுகளும் சாய்ந்தமருது உட்பட கிழக்கு மாகாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 வருடகாலமாக இயங்கி வரும் இந்நிறுவனம் குறிப்பாக இளைஞர்கள் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த ஊடகப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களது வாழ்வதாரத்திற்கும் உதவிகளை வழங்கி வருகின்றது. அத்துடன் ஊடகம் பற்றிய பயிற்சிநெறிகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தினை கட்டியெழுப்பும் லக்ஸ்டே மீடியாவின் விசேட திட்டத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர விரும்பும் இளைஞர்கள், சமூக சேவை ஊடகத்தில் மற்றும் பத்திரிகைத்துறை பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பு கொள்ள முடியம்.

அஷ்ரப் ஏ. சமத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT