Thursday, May 16, 2024
Home » SITREK Group என மீள்வர்த்தக நாமமிடப்பட்டுள்ள Certis Lanka

SITREK Group என மீள்வர்த்தக நாமமிடப்பட்டுள்ள Certis Lanka

by mahesh
April 10, 2024 9:00 am 0 comment

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடியான Certis Lanka, நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது பயணத்தில் முக்கியமானதொரு சாதனையாக SITREK Group என்ற தனது புதிய வர்த்தகநாம அடையாளத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விமரிசையான நிகழ்வொன்று புகழ்மிக்க கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றதுடன், மதிப்பிற்குரிய விருந்தினர்கள், தொடர்புபட்ட பல்வேறு தரப்பினர், ஊடகவியலாளர்கள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

SITREK Group என்ற பெயர் மாற்றமானது கட்டமைப்பு, ஒருமைப்பாடு, நம்பிக்கை, பொறுப்புணர்வு, மகத்துவம் மற்றும் அறிவு ஆகிய தனது பிரதான விழுமியங்களில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில் இந்த மூலோபாய நகர்வு அமைந்துள்ளது. இந்த விழுமியங்கள் அனைத்தும் நிறுவனத்தின் பிரதான தூண்களாக காணப்படுவதுடன், முழுமையான இலங்கை நிறுவனமாக மாறுவதை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கின்ற அதேசமயம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சும் வகையில் இயங்குவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.

SITREK Group இன் குழும இணை முகாமைத்துவப் பணிப்பாளர் மினோலி விஜேசிங்க நிகழ்வில் உரையாற்றுகையில், “SITREK Group என மாற்றம் காண்பது நிறுவனத்திற்கு பாரிய வாய்ப்பினை ஏற்படுத்துவதுடன், எதிர்கால விஸ்தரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு இடமளித்து, எமது வாடிக்கையாளர்களுக்கு இன்றும் வினைதிறனுடனும், செயல்திறனுடனும் சேவைகளை வழங்குவதற்கு எம்மை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT