Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 83

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 83

by damith
April 8, 2024 1:26 pm 0 comment

உறுதியான நிலைப்பாடு இல்லாமலும். ஒருமுகப் படுத்திய மனநிலைமை இல்லாமையினாலும் மனிதன் பலவிதமான இன்னலுக்கு ஆளாகிறான். இதனால், தன் ஆற்றல் முழுவதையும் இழக்கிறான். எந்த ஒரு செயலிலும் வெற்றியடைய, ஒருமுகப் படுத்தப்பட்ட ஆற்றல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வெற்றி அடைவதில் உறுதி கொள்ள வேண்டும். தெளிவான ஒரு முடிவு எடுத்த பின் அதை நிறைவேற்றுவதில் நம் ஆற்றல் முழுவதையும் செலவிட வேண்டும். எந்த ஒரு செயலையும் முடிவெடுப்பதற்கு முன் தனது நலம் விரும்பிகள். நண்பர்கள். அறிவு ஜீவிகள் என பலரிடமும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆலோசிக்கலாம். ஆனால் முடிவெடுத்த பின்னர், தயங்காமல் அச்செயலை முடித்து வெற்றி காண்பது ஒன்றே தன் முழு மூச்சாகக் கொள்ள வேண்டும். தனது தகுதி. தன்னுடைய திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னம்பிக்கையுடன் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தாம் மேற்கொண்ட செயல்களை துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும். ஆண்மையுடனும் நிறைவேற்ற கடமையாகும். அதன் பலனை ஆண்டவனிடத்தில் விட்டுவிட செயல்படுத்துவது மட்டுமே நம் வேண்டும். கடவுள் நிச்சயம் நமக்கு முன்னேற்றத்தை தருவார். நாம் விரும்பிய வாழ்க்கையை நமக்குத் தருவார்.

சுயநலத்துடன் தனக்காக மட்டுமே வாழ்வது என்பது. மனித வாழ்க்கைக்கு உகந்தது ஆகாது. சுயநலத்துடன் பிறந்து, சுய நலத்துடன் வளர்ந்து, தான் மட்டுமே உண்டு. உடுத்தி வாழ்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றது போல் தெரிந்தாலும், உண்மையில் அவன் தோற்றுப் போனவனே ஆவான்.

மற்றவர்களுக்கு உதவி புரிந்து வாழ்வதே. இப்படைப்பின் நோக்கமாகும். நீர்கடலிருந்து நீராவியாகி, மழை தரும் மேகம் உருமாறி தவித்த பூமிக்கு மழையாக பொழிந்து, பிறர் நலம் பேணுகிறது. பூமியில் பெய்த மழைநீர் நதிகளாகி, கடலின் மகத்துவத்தை உணர்ந்து அதனுடன் சங்கமிக்கின்றன. மற்றவர்களை இன்பமூட்டவே காற்றும் செயலாற்றுகிறது. சூரியன். சந்திரன். நக்ஷத்திரங்கள் அல்லும் பகலும் ஒளிவீசுவதும் தனக்காக அல்ல: பிறருக்காக இவ்வாறு இயற்கைகள் யாவும், பிறர் நலம் பேணும் போது மனிதன் மட்டும் சுயநலத்துடன் செயல்படுவது தகுமா?

(தொடரும்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT