Monday, May 20, 2024
Home » அதிக செலவீனமுள்ள மாவட்டமாக கொழும்பு

அதிக செலவீனமுள்ள மாவட்டமாக கொழும்பு

குறைந்த செலவுள்ள மாவட்டமாக மொனராகலை பதிவு

by Gayan Abeykoon
March 29, 2024 9:33 am 0 comment

அதிக செலவீனங்கள் உள்ள  மாவட்டமாக கொழும்பு  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத்  தேவைகளை  நிறைவேற்ற   மாதாந்தம் 17 ஆயிரத்து 14 ரூபா தேவைப்படு வதாகவும் தொகை  மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வறுமைக்கோடு தொடர்பான புதிய அறிக்கையை  நேற்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டது.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவினமுள்ளதாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது. குறைந்த செலவினமுள்ள   மாவட்டமாக  மொனராகலை உள்ளதாகவும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT