Monday, May 20, 2024
Home » தேவாலய கூரையில் தொங்கவிடப்பட்டுள்ள நைல் முதலை

தேவாலய கூரையில் தொங்கவிடப்பட்டுள்ள நைல் முதலை

- எம்பாமிங் செய்யப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழைமையானது

by Prashahini
March 26, 2024 10:07 am 0 comment

இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் அமைந்துள்ள Santuario Della Beata Vergine Maria Delle Grazie தேவாலயத்தின் கூரையில், ஐந்து நூற்றாண்டுகள் பழைமையான முதலை தொங்கவிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் மத அடையாளத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

அதாவது, பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தில் பாம்புகள், டிராகன், முதலைகள் போன்றவை சாத்தானின் உருவங்களாகவோ அல்லது மனிதர்களை பாவத்துக்கு இட்டுச்செல்லும் விலங்குகளாகவோ கருதப்பட்டன.

எனவே, தேவாலயத்தின் கூரையில் உயரமான சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது, தேவாலயத்திற்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளமாகவும் இருந்துள்ளது.

இந்த தேவாலயமானது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த தேவாலய மேற்கூரையில் உள்ள முதலையானது, சுமார் 500 ஆண்டுகள் பழைமையான உண்மையான எம்பாமிங் செய்யப்பட்ட நைல் முதலை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT