Monday, May 20, 2024
Home » சீனாவின் ‘போவா’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பீஜிங் பயணம்

சீனாவின் ‘போவா’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பீஜிங் பயணம்

by sachintha
March 26, 2024 7:48 am 0 comment

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (25) சீனாவின் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.

அங்கு சென்ற பிரதமரை,சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர், சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள்,சீனாவுக்கான இலங்கை பதில் தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான “போவா” மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் பொருட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன அங்கு சென்றுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பும் பிரதமருக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT