Friday, May 17, 2024
Home » மலையகத்தில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

மலையகத்தில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

by sachintha
March 19, 2024 7:27 am 0 comment

2,000 ரூபா கரட் 280 ரூபாவுக்கு விற்பனை

மலையக பகுதிகளில் மரக்கறி வகைகளின் விலைகள் குறைவடைந்துள்ளன. கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் (18) ஒரு கிலோ கரட் 280 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ போஞ்சி 150 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில், மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக மரக்கறி உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT