Monday, May 20, 2024
Home » 16 விடயங்கள் அடங்கிய செயற்றிட்டம்; நடைமுறைப்படுத்த IMF இணக்கம்

16 விடயங்கள் அடங்கிய செயற்றிட்டம்; நடைமுறைப்படுத்த IMF இணக்கம்

பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வரமுடிவு

by damith
March 18, 2024 11:20 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை முழுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளன.

governmentdiagnostic ஆட்சியின் வெளிப்படைத்தன்மை என்ற தொனிப்பொருளில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ஆளணி பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முக்கியஸ்தர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக ஆரம்பத்தில் 14 விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தரப்பினர் இதன்போது இணக்கப்பாடு தெரிவித்துள்ளதுடன் இரண்டு விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுங்கம், தேசிய வருமான வரித் திணைக்களம் ஆகியவற்றின் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை முறையாக தயாரித்ததன் பின்னர் அந்த இரண்டு விடயங்களையும் முழுமைப்படுத்துவதை அரசாங்கம் இலக்காகக்கொண்டுள்ளது.

நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்தல், அரச பொறிமுறையை முறையாக முன்னெடுத்தல் ஆகியவையும் உள்ளடங்கும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT