Monday, May 20, 2024
Home » கொழும்பு, களுத்துறை பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

கொழும்பு, களுத்துறை பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

- நாட்டில் பெரும்பாலும் வரண்ட வானிலை

by Rizwan Segu Mohideen
March 12, 2024 7:48 am 0 comment

இன்றையதினம் (12) நாட்டின் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT