யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களை பாதிக்கும் பிரச்சனைகளை தீர்க்ககோரி நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று மற்றும் நாளைய தினம் இரண்டுநாள் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கல்விசாரா ஊழியர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நாளை (29) கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்