Home » யாழில். சகோதரர்களுக்கு இடையில் மோதல்

யாழில். சகோதரர்களுக்கு இடையில் மோதல்

- சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்திக்குத்து

by Prashahini
February 27, 2024 1:00 pm 0 comment

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு இடம்பெற்றது. அதன் போது , இரு சகோதரர்களின் சண்டையை விலக்கி சமாதனப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.

அவ்வேளை சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x