Sunday, May 5, 2024
Home » கலா பொல 2024

கலா பொல 2024

by Rizwan Segu Mohideen
February 21, 2024 3:32 pm 0 comment

தற்போது 31 ஆவது ஆண்டை எட்டியுள்ள, இலங்கையில் வருடாந்தம் இடம்பெறுகின்ற திறந்தவெளி ஓவியச் சந்தையான கலா பொல, 2024 பெப்ரவரி 18 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

1993 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் கீற் நிதியம் (George Keyt Foundation) கலா பொல என்ற எண்ணக்கருவுக்கு, செயல் வடிவம் கொடுத்தது. 1994 ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வர்த்தக சமூக நலன்புரி முயற்சிகளின் அங்கமாக, கலா பொல நிகழ்வுக்கு ஆதரவு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஓவியங்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கலைச் சமூகத்துடன் ஓவியக் கலைஞர்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு நாட்டில் மிகப் பாரிய களத்தை கலா பொல அவர்களுக்கு வழங்குவதுடன், அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான சந்தைக்களம் மற்றும் இடத்தையும் வழங்கி, தேசத்தின் படைப்பாக்கத்திறன் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.

இந்த ஆண்டு நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து கலந்துகொண்ட 350 க்கும் மேற்பட்ட உள்நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரான மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் நிகழ்வின் உத்தியோகபூர்வ வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT