2024ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு (20) அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது….
இதில், ‘ஜவான்’ படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருது பெற்ற பின்னர் நடிகர் ஷாருக்கான் பேசும்போது, “நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
“நான் ரொம்ப நாள்களாக சிறந்த நடிகர் விருது வாங்கவில்லை. மீண்டும் இந்த விருது வாங்காமேலேயே போய் விடுவேன் என்பதுபோல் தோன்றியது.
“அதனால், இந்த விருது கிடைத்திருப்பதில் இப்போது நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு,” என கூறியுள்ளார்.
‘ஜவான்’ படக்குழுவினர் அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். “தொடர்ந்து கடுமையாக உழைப்பேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களை மகிழ்விப்பேன். அதற்கு நான் உறுதி கூறுகிறேன்,” என அவர் கூறினார்.
மேலும் சிறந்த இயக்குநராக ‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்படத்தில் வில்லனாகக் கலக்கிய பாபி தியோல் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதைப் பெற்றார்.
மேலும்…….
சிறந்த நடிகர் – ஷாருக்கான் (ஜவான்)
சிறந்த நடிகை – நயன்தாரா (ஜவான்), ராணி முகர்ஜி (மிஸ் சாட்டர்ஜி ௩ நார்வே)
சிறந்த இயக்குநர் – சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) – விக்கி கெளஷல் (சாம் பகதூர்)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)
சிறந்த பின்னணி பாடகர் – வருண் ஜெயின், (தேரே வஸ்தே – ஜரா ஹட்கே ஜரா பச்கே)
சிறந்த வில்லன் – பாபி தியோல் (அனிமல்) ஆகும்.
இவர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக மெளசுமி சாட்டர்ஜி மற்றும் இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக கே.ஜே.யேசுதாஸுக்கும் வழங்கப்பட்டது. மேலும் அட்லீ, ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோருக்கும் 2023 ஆம் ஆண்டில் அவர்களின் பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டது.