Home » நெருப்புடன் விளையாடுவதாக பிலிப்பைன்ஸிற்கு சீனா எச்சரிக்கை

நெருப்புடன் விளையாடுவதாக பிலிப்பைன்ஸிற்கு சீனா எச்சரிக்கை

- தன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளில் இராணுவ நிலைநிறுத்தத்தை அதிகரிக்க மணிலா திட்டம்

by Rizwan Segu Mohideen
February 18, 2024 12:12 pm 0 comment

“சீனாவின் முக்கிய நலன்களின் மையத்தில் தாய்வான் உள்ளது என்றும் கடக்க முடியாத சிவப்புக் கோடு மற்றும் அடிமட்டத்தை இது பிரதிபலிக்கிறது” எனவும் சீன வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வாங் வென்பின் பீஜிங்கின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

தாய்வானில் இருந்து 200கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள பெடனஸில் துருப்புக்கள் மற்றும் கட்டுமானத்தை அதிகரிக்க பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் கில்பர்டோ தியோடோரோ உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியையடுத்து பீஜிங்கின் இவ்வாறு கடும் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளது.

“பிலிப்பைன்ஸ் தரப்பு அதைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். விவேகத்துடன் செயல்பட வேண்டும் மற்றும் தாய்வான் பிரச்சினையில் நெருப்புடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மற்றவர்களால் சுரண்டப்படுவதைத் தவிர்க்கவும், தங்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும் வேண்டும் ” என்று பீஜிங்கில் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

சீனாவும் பிலிப்பைன்ஸும் நீண்ட நட்பு நாடுகளாக இருக்கின்றன, நல்ல அண்டை நாடுகள் என்ற வகையில் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் பரஸ்பர மரியாதையுடன் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தாய்வானை சீனாவின் ஒரு பகுதியாகவே பீஜிங் பார்க்கிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தாய்வானை சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.
எவ்வாறாயினும், இந்தத் தீவை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா எதிர்க்கிறது மற்றும் அதற்கு ஆயுதங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது.

வொஷிங்டன் அதன் பாதுகாப்பிற்காக சுயமாக ஆளும் நாட்டுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருக்கிறது .

கடந்த ஆண்டு, அதிகரித்த பதற்றங்கள் மற்றும் பீஜிங்குடனான உறவுகள் சிதைந்த நிலையில், மணிலா தனது இராணுவ தளங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் கில்பர்டோ தியோடோரோவின் வருகை “பிராந்திய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான நமது நாட்டின் அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது” என பிலிப்பைன்ஸ் கடற்படை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனக் கடற்படையானது வழக்கமாக பாஷி கால்வாயை பயன்படுத்தி மேற்கு பசிபிக் பகுதிகளுக்குப் பயணம் செய்வதோடு குறிப்பாக தாய்வானைச் சுற்றி அடிக்கடி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

படான்ஸ் தீவுகளில் சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க பிலிப்பைன்ஸுடன் அமெரிக்க ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பரில், பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் இதுவரை இல்லாத மிகப்பெரிய கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது, கடல் ரோந்துகளை நடத்துவதற்கான பயிற்சி தளமாகவும், ஏவுகணை இடமாகவும், படான்ஸைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT