Friday, May 17, 2024
Home » அநுராதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை விஸ்தரிக்க அரசு கவனம்

அநுராதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை விஸ்தரிக்க அரசு கவனம்

மாவட்ட அரசாங்க அதிபர் ஜனக்க ஜயசுந்தர

by Gayan Abeykoon
February 15, 2024 7:32 am 0 comment

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜனக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

நாட்டுக்கு அதிக வருமானத்தினை ஈட்டித்தரக்கூடிய சுற்றுலாத்துறையினை அநுராதபுர மாவட்டத்தில் விஸ்தரிப்பதன் மூலம் மாவட்டத்திலுள்ள சுற்றுலா துறையுடன் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் அநுராதபுரம் புனித பூமிக்கு வருகின்றபோதிலும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய விதத்தில் அநுராதபுரத்தில் தரிக்கக்கூடிய இடங்கள் காணப்படாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள்  அநுராதபுரம் கும்பிச்சங்குளம் மற்றும் அநுராதபுரம் மல்வத்து ஓயா ஆற்றங்கரை பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் சவாரி  படகு சேவையினை ஆரம்பிப்பதற்கும்  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது  மாவட்ட அரசாங்க அதிபர் ஜனக்க ஜயசுந்தர அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துக்ெகாண்டமை விசேட அம்சமாகும்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT