Friday, May 3, 2024
Home » வடக்கு, கிழக்கு தவிர நாட்டில் அதிக வெப்பமான காலநிலை
காற்றின் அசைவு நிலையில் குறைவு

வடக்கு, கிழக்கு தவிர நாட்டில் அதிக வெப்பமான காலநிலை

by mahesh
February 14, 2024 7:10 am 0 comment

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் அசைவு குறைவடைந்துள்ளதால் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விட அதிக வெப்பத்தை மக்கள் உணர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணம் பகுதிகளில் காற்றின் அசைவு குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் சில பகுதிகளில் காற்றின் அசைவு குறைந்து வருகிறது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஓரளவு பலத்த காற்று வீசி வருவதால், நிலைமை வேறுபட்டுள்ளதென்றார்.

இது ஒரு அசாதாரண நிகழ்வல்ல, ஒவ்வொரு ஆண்டிலும் இவ்வாறான காலப்பகுதில் நடக்கும் நிகழ்வாகும். எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம். ஏப்ரல் முதல் வாரத்தில் சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் பிற்பகல் நிலவரப்படி கொழும்பில் 350C, கட்டுநாயக்கவில் 330C, மாத்தறை 320C, குரநாகல் 310C மற்றும் இரத்தினபுரியில் 310C ஆக வெப்பநிலை பதிவாகியிருந்தன. யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரிக்கும் குறைவாகவே பதிவாகியிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT