Home » வீதிகளில் நெல் உலர விடுவதன் காரணமாக வாகன சாரதிகள் பாதிப்பு

வீதிகளில் நெல் உலர விடுவதன் காரணமாக வாகன சாரதிகள் பாதிப்பு

by Prashahini
February 7, 2024 9:46 am 0 comment

பெரும்போக அறுவடை நடைபெற்று தற்பொழுது மழையும் ஓய்ந்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அறுவடை செய்த நெல்களை விவசாயிகள்வீதிகளிலே உலர விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக வீதியோரங்களிலேயே தமது நெல்களை உலர விடுவதன் காரணமாக வீதிகளால் செல்லும் வாகன சாரதிகள் பெரிதும் சிரமப்படுவதாகவும், நெல் உலர விடுவதன் காரணமாக கடந்த காலங்களில் வீதி விபத்துக்களினால் மூன்று பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்று (06) இரவும் கிளிநொச்சிக்கு நோக்கி பயணித்த உழவு இயந்திரமும், பரந்தன் பகுதியிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, தற்பொழுது மழையும் ஓய்ந்து உள்ளது. வீதிகளில் நெல்லை உலர விட வேண்டிய தேவை என்னவென்று புரியாத நிலையில் உள்ளதாகவும், இதனை விவசாயிகள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக வீதிகளில் நெல்லை உலர விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT