Monday, May 20, 2024
Home » மாங்குளம் பிரதேசத்துக்கான ‘199’ அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

மாங்குளம் பிரதேசத்துக்கான ‘199’ அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

by mahesh
February 7, 2024 12:10 pm 0 comment

மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 அம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் அவசர அம்புலன்ஸ் (1990) வண்டி ஏ 9 வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியகுளம், நட்டாங்கண்டல் மல்லாவி, கோட்டை கட்டிய குளம், அம்பலபெருமாள் மற்றும் அம்பகாமம் தட்சடம்பன் ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். எனினும் கடந்த மூன்று மாதங்களாக இந்த அம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்துவருகின்றனர்.

குறிப்பாக நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளிலிருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபா வரையில் ஆட்டோவுக்கு செலவழிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(மாங்குளம் குரூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT