76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் மரியாதை செலுத்துவதோடு மறுபுறம் மகிழ்ச்சியளிக்கிறது.
நாடு யாருக்கும் அடிமையாகாமல், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலணித்துவ நாடாக இல்லாவிட்டாலும், நாட்டில் அரசியல் சுதந்திரம் எந்தளவு உள்ளது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் தலைமையிலான அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனூடாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக,காலி ஹபுக்கல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வங்குரோத்து நிலைமையால், 220 இலட்சம் மக்களும் பொருளாதார சுதந்திரத்தையும் சமூக சுதந்திரத்தையும் இழந்துள்ளனர்.சேதன உர மோசடியால் விவசாயத்தில் ஈடுபடும் சுதந்திரமும் இழக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்க, குரல் கொடுக்க, வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போது, பேராட்டம் நடத்தும் போது,நீர் தாரை தாக்குதலுக்கும், கண்ணீர் புகைத் தாக்குதலுக்கும்,தடிகள் தாக்குதல்களுக்கும் மக்கள் உள்ளாகும் போது நாட்டில் உண்மையான சுதந்திரம் உள்ளதா என்பது குறித்து பெரும் கேள்வி எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தகங்களும் சொத்துக்களும் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் நாட்டில்,கல்வியில் சுதந்திரம் இல்லாத நாட்டில், சுதந்திரத்தை உண்மையாக கொண்டாட முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் சுதந்திர செயல்பாடு இல்லாது போனமை, நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் மீன் வளத்தில் தன்னிறைவு இன்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நாட்டில் சுதந்திரத்தை அபிமானத்துடன் கொண்டாட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காத்தே 76 ஆவது சுதந்திரத்தை நாம் உண்மையில் கொண்டாட வேண்டும். இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து மீள 220 இலட்சம் மக்களும் சாதி, மதம், இனம், குலம், கோத்திரம் மற்றும் கட்சி என அனைத்து வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து, பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.