Home » ஐ.ம.ச. ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை

ஐ.ம.ச. ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை

- குறித்த பேரணியைத் தடுக்க பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு

by Rizwan Segu Mohideen
January 30, 2024 3:34 pm 0 comment

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்று வரும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (30) பிற்பகல் 1.30 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் “மாற்றத்தை நாடும் வருடம்-2024” எனும் தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் எதிர்ப்பு பேரணி மற்றும் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐ.ம.ச. ஒழுங்கு செய்துள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு இவ்வாறு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ள்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x