Sunday, May 5, 2024
Home » “பொரலஸ்கமுவே பென்சி” ஐஸ், கொக்கெய்னுடன் கைது
துபாய் பேலியகொட கலன"வின் சகா

“பொரலஸ்கமுவே பென்சி” ஐஸ், கொக்கெய்னுடன் கைது

by Gayan Abeykoon
January 24, 2024 8:48 am 0 comment

“பொரலஸ்கமுவே பென்சி” என்ற நபர் சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொரு ளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயிலிருந்து நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் “பேலியகொட கலன” என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் வழிநடத்தும் நபர் இவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் நபரும் ஐஸ் போதைப்பொருள்  பொதியுடன் கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேக நபருடன் 50 கிராம் கொக்கெய்ன், 05 கிராம் ஐஸ் போதைப்பொருள், 06 ஸ்மார்ட் போன்கள் உட்பட 09 தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு, ஐஸ் பொதிசெய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் உறை, கம் டேப் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

பிலியந்தலை, கெடபுவான அளுத் வீதி பிரதேசத்தில் விடுதி அறையில் தங்கியிருக்கும் நபர், பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக பிலியந்தலை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் முதித திலகரத்னவுக்கு தகவல் கிடைத்தது.  இதற்கமைய சந்தேகநபர் விடுதி அறையில் பொலிஸாரால் 25 கிராம் கொக்கெய்ன் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது, பக்கத்து அறையில் தங்கியிருந்த மற்றுமொரு நபரரையும் ஐஸ் போதைப்பொருளை அருந்திக் கொண்டிருந்த போது கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதான சந்தேகநபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், நீண்ட நேர விசாரணையின் போது தெரியவந்த தகவலின்படி சந்தேகநபர் தங்கியிருக்கும் அறைக்கு பின்னாலுள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 25 கிராம் கொக்கெய்ன் மற்றும் 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயிலுள்ள கலன என்பவர் வட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக வழங்கும் அறிவுறுத்தல்களின் பிரகாரம், அவர் பெயர் கூறும் நபர்களுக்கு மாத்திரம் கொக்கெய்ன் போதைப்பொருள் வழங்கியதாகவும், ஏனைய போதைப்பொருட்கள் வழமை போன்று விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொக்கெய்ன் போதைப்பொருளை கொள்வனவு செய்பவர்களில் பெரும்பாலானோர் கிளப்புகளுக்குச் செல்பவர்கள் எனவும், நிதி நிர்வாகத்தை கலனவே மேற்கொள்வார் எனவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத யுவதிகள் இந்த போதைப்பொருள் அனைத்தையும் வத்தளை பிரதேசத்திற்கு கொண்டுவந்து தமக்கு வழங்குவதாகவும் அதுபற்றி கலன தமக்கு முன்கூட்டியே அறிவிப்பார் எனவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT