Home » யாழ். பல்கலையில் இடம்பெறும் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலையில் இடம்பெறும் ஆய்வு மாநாடு

- 136 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆயர்த்தம்

by Prashahini
January 17, 2024 11:09 am 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு இன்று (17) நடைபெறுகின்றது.

தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலைப்பீடத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாயக் கற்கைகள் சார்ந்த 136 ஆய்வுக்கட்டுரைகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்து வெளியேறும் மாணவர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

“இலங்கையில் தொடரும் நெருக்கீடுகளிடையே தப்பிப்பிழைத்தலும் எதிர்ப்பும்” என்னும் கருப்பொருளில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாடு, மாணவர்கள் தமது இறுதிவருட ஆய்வுச் செயற்பாட்டின் பேறான ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது.

மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எல்.ரமணன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

மாநாட்டின் தலைமையாளராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் சிறப்புரையாளராக இரேனியஸ் செல்வின் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் 2 தொகுதிகளாக 17 விடயதானங்களின் ஊடாக நடைபெறவுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT