Wednesday, May 15, 2024
Home » நாட்காட்டி, குறிப்பேடுகள் விநியோகம்

நாட்காட்டி, குறிப்பேடுகள் விநியோகம்

by damith
January 8, 2024 5:58 am 0 comment

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளன ஏற்பாட்டில், (2024) நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடுகள் வெளியிடப்பட்டன.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத் தலைவர் ஏ.மாபீர் தலைமையில் ஒலுவில் கிறீன் விலாவில் நேற்று (07 ) இந்நிகழ்வு நடைபெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவர்எ ம்.ஐ.உதுமாலெப்பை மற்றும் மாவட்ட பிரதம ஆலோசகர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஆதம்பாவா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடுகளை வெளியீட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனதின் செயலாளர் எம்.எச்.ஏ.வஹாப், மாவட்டப் பொருளாளர் ஐ.அஹமட் ஸிறாஜ், மாவட்ட முன்னாள் தலைவர் (ஐ.பீ.பீ) எம்.ஐ.எம்.றியாஸ் முன்னாள் தலைவர்களான எம்.எம்.அஜ்வத், யூ.எம்.நியாஸி, பாலமுனை பாறூக், உட்பட முன்னாள் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆலோசகர்கள், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT