128
கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச்சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன (01) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடற்றொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திருமதி இந்து இரத்நாயக்க ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவர், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் மேலதிகச் செயலாளர்களான திருமதி அப்சரா நிசங்க, தம்மிக ரணதுங்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிளும் கலந்துகொண்டனர்.