Thursday, May 16, 2024
Home » பாதி ஆண், பாதி பெண்; கெமராவில் சிக்கிய அரிய புகைப்படம்

பாதி ஆண், பாதி பெண்; கெமராவில் சிக்கிய அரிய புகைப்படம்

by Prashahini
January 4, 2024 1:18 pm 0 comment

இயற்கையானது மனிதர்களை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்தாது. கெமராவில் படம்பிடிக்கப்பட்ட இந்த மிக அரிதான பறவை அத்தகைய ஒரு உதாரணம்.

ஆண், பெண் என இருபாலினம் கொண்ட மிகவும் அரிய வகையிலான “தேன் கொடி” (Green Honey Creeper) என்ற பறவை கண்டறியப்பட்டுள்ளது.
பாதி பச்சை நிறம் பெண் எனவும், மறுபாதி நீலம், ஆண் எனவும் கூறப்படுகின்றது.

ஒடாகோ பல்கலைக்கழகம் இந்த அசாதாரண பறவை பற்றி ஒரு வலைப்பதிவு இடுகையில் பகிர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விலங்கியல் நிபுணருமான ஹமிஷ் ஸ்பென்சர் மற்றும் ஜான் முரில்லோ தனது விடுமுறைக்காக, கொலம்பியா காட்டிற்கு சென்ற போதே அரிய பறவையை கண்டதாக தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி கூறுகையில்,

“பல பறவைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் ஆனால், எந்த பறவையினத்திலும் இருதரப்பு ,gynandromorph காண முடியாது. பறவைகளில் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது, நியூசிலாந்தில் இருந்து இதுவரை எந்த உதாரணமும் எனக்குத் தெரியாது. இது மிகவும் வியக்க வைக்கிறது, அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, ”என்று பேராசிரியர் ஸ்பென்சர் கூறினார்.

gynandromorph என்றால் என்ன?
பேராசிரியர் ஸ்பென்சர் “வழக்கமாக தனித்தனி பாலினங்களைக் கொண்ட ஒரு இனத்தில் ஆண் மற்றும் பெண் பண்புகள் கொண்ட விலங்குகள்” என்றும், இது பொதுவாக பூச்சிகள், சிலந்திகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பல்லிகள் அல்லது கொறித்துண்ணிகளில் கூட காணப்படுமெனவும் குறிப்பிட்டார்.

கடந்த 100 ஆண்டுகளில் இதுபோல கண்டறியப்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT