Friday, May 3, 2024
Home » 7 புதுமுக வீரர்களுடன் ஆஸி. செல்லும் மேற்கிந்திய தீவுகள்

7 புதுமுக வீரர்களுடன் ஆஸி. செல்லும் மேற்கிந்திய தீவுகள்

by mahesh
December 24, 2023 2:09 pm 0 comment

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடவுள்ளது.

முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான கிரேக் பிராத்வைட் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து அனுபவ வீரர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் கைய்ல் மேயர்ஸ் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். அத்துடன், வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். மறுபுறம் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் 7 புதுமுக வீரர்களை இணைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஸச்சரி மெக்காஸ்கி, விக்கெட் காப்பாளர் டெவின் இம்லாச், சகலதுறை வீரர்களான ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ் மற்றும் கெவின் சின்க்ளேர், வேகப்பந்து வீச்சாளர்களான அகீம் ஜோர்டான் மற்றும் ஷமர் ஜோசப் என புதிய ஏழு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி ஜனவரி 10–13ஆம் திகதி வரை அவுஸ்திரேலிய பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியில் மோதுகிறது. அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 17ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது போட்டி பிரிஸ்பனில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT