மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி நேற்று (18) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.elect