Thursday, December 12, 2024
Home » டுபாயில் இன்று IPL மினி ஏலம் ஆரம்பம்

டுபாயில் இன்று IPL மினி ஏலம் ஆரம்பம்

- ஒவ்வொரு அணியின் கையிருப்பு தொகையும், அவர்கள் நிரப்ப வேண்டிய இடங்களும்

by Prashahini
December 19, 2023 12:20 pm 0 comment

ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் டுபாயில் இன்று (19) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன.

மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ஐசிசி உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள். இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க காத்திருக்கின்றன.

இதுவரை நடைபெற்ற மினி ஏலங்களில் இதுவே அதிக தொகை செலவிடப்படக்கூடிய மினி ஏலமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் வைத்துள்ள கையிருப்பு தொகை, அவர்கள் நிரப்ப வேண்டிய இடங்கள்

  • சென்னை சூப்பர் கிங்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.31.40 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (3 வெளிநாட்டு வீரர்கள்)
  • மும்பை இந்தியன்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.17.75 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (4 வெளிநாட்டு வீரர்கள்)
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கையிருப்பு தொகை: ரூ.34 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (3 வெளிநாட்டு வீரர்கள்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.32.70 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்)
  • ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்: கையிருப்பு தொகை: ரூ.32.70 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 12 (4 வெளிநாட்டு வீரர்கள்)
  • டெல்லி கேபிடல்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.28.95 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 9 (4 வெளிநாட்டு வீரர்கள்)
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.13.15 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 6 (2 வெளிநாட்டு வீரர்கள்)
  • பஞ்சாப் கிங்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.29.10 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (2 வெளிநாட்டு வீரர்கள்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.14.50 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (3 வெளிநாட்டு வீரர்கள்)
  • குஜராத் டைட்டன்ஸ்: கையிருப்பு தொகை: ரூ.38.15 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள்: 8 (2 வெளிநாட்டு வீரர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT