Sunday, May 19, 2024
Home » சம்மாந்துறை மருத்துவமனையின் தேவைகளை கேட்டறிந்த ரிஷாட் எம்.பி.

சம்மாந்துறை மருத்துவமனையின் தேவைகளை கேட்டறிந்த ரிஷாட் எம்.பி.

by mahesh
December 13, 2023 1:10 pm 0 comment

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை (09) விஜயம் செய்து அங்குள்ள நிலைமையை அவதானித்ததுடன், அவ்வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் அவர் கலந்துரையாடினார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனீபா, அபிவிருத்திக் குழுத் தலைவர் வைத்தியர் இஸ்ஸடீன், திட்டமிடல் பிரிவு வைத்தியர் நியாஸ் உள்ளிட்ட பலர் ரிஷாட் எம்.பி.யுடன் கலந்துரையாடினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT