Saturday, May 18, 2024
Home » ஏறாவூர், ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரி

ஏறாவூர், ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரி

by mahesh
December 13, 2023 6:00 am 0 comment

“மகுட வாசகம் — நன்மை என்பது நற்குணம்” 
“தூரநோக்கு -இஸ்லாமிய ஆளுமையும் நற்பண்பும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூக உருவாக்கம்”

“பணிக்கூற்று; –

கிடைக்கின்ற வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி, நல்லோர்களின் வழிநின்று அன்பு, தியாகம், வீரம் மற்றும் பணிவு போன்ற அறப்பண்புகள் நிறைந்த தற்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திகண்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்குதல்”

கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆன்மீக ஞானம் பிரகாசிக்கும் எழில் மிகு நகரமே ஏறாவூர். இவ்வூரில் புன்னக்குடா வீதியில் அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தையில் உள்ள தளமே ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரியாகும்.

அல்லாஹ்வின் பேரருளால் மௌலவி யூ. அப்துல் ஹலீம் (முனாப்) மன்பஈ, பீஏ அவர்களின் அயராத முயற்சியினால் இக்கலாபீடம் வீறுநடை போடுகின்றது என்றால் மிகையாகாது. இவ்வடிப்படையில் எமது ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரியும் சங்கைக்குரிய சாதாத்மார்களின் நறுமணத் தொடர்புடன் இயங்கி வருகின்றது.

இலங்கையின் சகல பாகத்திலும் ஆன்மீக பிரசாரங்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றி, இறைத்திருப்தியை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு மௌட்டீக சிந்தனைகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயலாற்றி, ஷரீஅத்தை நிலைநிறுத்தி தரீக்கா மஷாயிகுமார்களின் பணிகளை செவ்வனே நிறைவேற்றிவரும் எமது குருநாதர் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷரீப் அலி அஸ்ஸெய்யிதுஷ் ஷரீப் ஹஸனுல் அன்வர் மௌலானா அல் ஹஸனி வல் ஹுஸைனி ஸைபுல்லாஹில் காதிரி (மத்தல்லாஹு லில்லஹுல் ஆலி) அன்னவர்களின் அழகிய வழிகாட்டலில் இக்கலாபீடம் இயங்கி வருகின்றது.

எமது ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரி 2011.09.07 இல் ஏறாவூர்- பெண் பாடசாலை வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுஷ் ஷாதுலியில் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதன் கல்விப் பயணம் தொடர்ந்தது. அல்லாஹ்வின் பேரருளால் அதன் சொந்தமான காணியில் 2017.03.26 முதல் எளிமையாக அதன் பயணம் தொடர்ந்து செல்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்புவிழா ஹிஜ்ரி 1439 ஜுமாதல் ஆஹிரா பிறை 08 (2018.02.24) அன்று மௌலானா உம்மா தர்ஹா ஷரீப் முன்றலில் நடைபெற்றது.

மௌலவி அல் ஆலிம் SM. பர்ஹான் – ஹஸனி அல்காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் IM. சிஹாமுத்தீன் – ஹஸனி அல்காதிரி – சுங்காவில

மௌலவி அல் ஆலிம் ALM. முஸ்தகீம் – ஹஸனி அல்காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் ALM. தஸ்பீர் – ஹஸனி அல்காதிரி – சுங்காவில

மௌலவி அல் ஆலிம் MM. இம்றான் – ஹஸனி அல்காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் SLM. சபான் – ஹஸனி அல்காதிரி – சுங்காவில

* இரண்டாவது பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1443 ஜுமாதல் ஊலா பிறை 21 (2021.12.26) அன்று ஸைனப் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

மௌலவி அல் ஆலிம் MN. அகீல் – ஹஸனி அல் காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் AN. அஸ்லம் – ஹஸனி அல் காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் RM. முஸர்ரப் – ஹஸனி அல் காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் NM. நஸ்மீர் – ஹஸனி அல் காதிரி – சுங்காவில

மௌலவி அல் ஆலிம் AL. அப்துல் அஸீஸ் – ஹஸனி அல் காதிரி – ஏறாவூர்

* மூன்றாவது பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1444 ஜுமாதல் ஊலா பிறை 02 (2022.11.27) அன்று ஹஸனிய்யா முன்றலில் நடைபெற்றது.

மௌலவி அல் ஆலிம் AMM. முபஸ்ஸிர் – ஹஸனி அல்காதிரி – தம்பாளை

மௌலவி அல் ஆலிம் SM நிப்ராஸ் – ஹஸனி அல்காதிரி – சுங்காவில

* நான்காவது தடவையாக இம்முறை பட்டமளிப்பு விழா ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஆகிரா பிறை 03 (2023.12.17) ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு ஹஸனிய்யா முன்றலில் நடைபெறவுள்ளது.

மௌலவி அல் ஆலிம் அல்ஹாபிழ் AM. ஆஸிப் – ஹஸனி அல்காதிரி – மீராவோடை

மௌலவி அல் ஆலிம் அல்ஹாபிழ் AC. பஸால் அஹ்மத் – ஹஸனி அல்காதிரி – ஏறாவூர்

மௌலவி அல் ஆலிம் அல்ஹாபிழ் AM அஸாதிக் – ஹஸனி அல்காதிரி – மீராவோடை

இம்முறை தலைப்பாகை சூடப்படும் மாணவர்கள்

அல்ஹாபிழ் AL. அக்ரம் – ஏறாவூர்

ILM. நப்ரான் – சுங்காவில

ARM. ருஷைத் – ஏறாவூர்

KM சஜீத் – சுங்காவில

எமது கலாபீடத்தின் கற்றல் நடவடிக்ககைகள் சிறப்பாக இடம் பெறுகின்றன. இங்கு GCE (OL/AL), அல் ஆலிம் , தர்மச்சாரிய, அஹதிய்யா பரீட்சைகளுக்கான வழிகாட்டல் முழுமையாக வழங்கப்படுகின்றது. கலாபீடத்திலிருந்து இதுவரை ஆறு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூர், வெளியூர் சகோதரர்களினதும் மாணவர்களின் அன்புப் பெற்றோர்களினதும் உதவியாலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிருவாகத்தினரின் தியாகத்தாலும் இக்கலாபீடம் சிறப்பாக இயங்கி வருகின்றது.

* எமது எதிர்கால திட்டங்கள்

01. பொருத்தமான உயர்கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 02. தொழிற்கல்வியை வழங்கல். 03. ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்தல். 04. மொழி விருத்தியை ஏற்படுத்தல். 05. துறைசார் நிபுணர்களை உருவாக்குதல். 06. சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல்.

07. பொருத்தமான நிதிக்கட்டமைப்பை ஏற்படுத்துதல். 08. சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை உருவாக்குதல்.

* எமதுதேவைகள்

01. சகல வசதிகள் கொண்ட வகுப்பறைகள்.

02. பூரணமான வசதிகள் கொண்ட மாணவர் விடுதி.

03. மாணவர்கள் தொழுவதற்கான வசதிகள்.

04. முழு வசதிகள் கொண்ட

நூலகம்.

05. கணினி வசதிகள்

06. நாளாந்த உணவுத் தேவைக்கான வசதிகள்

எமது கலாபீடத்துக்கான உதவிகளைச் செய்யவிரும்பும் சகோதரர்கள் 0775590712 / 0771921324 / 0756023337 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளலாம். எமது கலாபீடத்தின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்யும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

ஜஸாக்குமுல்லாஹு கைரா (தகவல், படங்கள் நாஸர் - ஏறாவூர் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT