349
கதிர்காமம் ருஹுணு மகா விகாரையிலிருந்து 38 பவுண் தங்கநகைகள் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து இருவரைக் கைது செய்ய சட்ட மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விகாரையிலிருந்து தங்கநகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பொலிஸ் மாஅதிபரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபரில் ருஹுணு கதிர்காம விகாரையின் பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகர முறைப்பாடு செய்ததை அடுத்து, இது தொடர்பான விசாரணையை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் சிரேஷ்ட பதில் பொலிஸ்
மாஅதிபர் தேசபந்து தென்னகோன் ஒப்படைத்தார். இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே சட்ட மாஅதிபர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.