Sunday, April 28, 2024
Home » A/L கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதிய புலைமைப்பரிசில்

A/L கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதிய புலைமைப்பரிசில்

- 3 அடிப்படை தகுதியின் கீழ் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

by Rizwan Segu Mohideen
December 1, 2023 5:28 pm 1 comment

– அறிவுறுத்தல் மற்றும் விண்ணப்பம் இணைப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

கடந்த வருடத்தில் 3,000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.

instruction_english

இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள்

  1. 2022 (2023) ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரம் பயில்வதற்கு தகுதி பெற்றிருத்தல்.
  2. அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்றல்.
  3. குடும்ப மாத வருமானம் ரூ. 100,000 இற்கு குறைவாக இருத்தல்

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.

President-Fund-Scholarship-Application

மேலும் செய்திகள்...

1 comment

Ananthasehar sathurmitha December 3, 2023 - 3:24 am

Thanks sir

Reply

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT