மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதமை ஏமாற்றமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய தேரர், தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்பில் மிகக் கேவலமாகவும் பகிரங்கமாகவும் பேசியிருக்கிறார். இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. தேரரின் இந்தக் கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது. இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடைசெய்யப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.