Home » இருளை ஒளியால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்

இருளை ஒளியால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்

- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தீபாவளி வாழ்த்துச் செய்தி

by Rizwan Segu Mohideen
November 12, 2023 8:28 am 0 comment

இருளை ஒளியால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டு வரும் நம்பிக்கைச் செய்தியாகும்.

நீங்கள் அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபங்கள் விளக்கட்டும்!

என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளின் தீபம், நம் இல்லத்திலுள்ள இருள் நீக்கி, ஔி கொடுப்பது போன்று நம் இதயங்கள் அன்பு, கருணை, ஒற்றுமை ஆகிய உணர்வுகளால் உண்மையாக பிரகாசித்தால், தீபாவளிக் கொண்டாட்டம் மனிதாபிமானதாக இருக்குமென்பது எமது நம்பிக்கையாகும்.

இருளை ஒளியால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டுமென்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டுவரும் நம்பிக்கைச் செய்தியாகும்.

ஒற்றுமை மற்றும் உண்மையின் பண்புகளை புதிய பரிமாணத்துக்கு உயர்த்தி, இந்த தீபாவளித் திருநாளில் நாம் பெறும் ஒளியின் மூலம் நீதிக்காக ஒரு சிறந்த எதிர்காலத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்தாகும்.

மோசடி, ஊழல், திருட்டு ஆகியவற்றை நிராகரித்து, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் நின்று, மக்களின் எதிர்காலத்துக்காக நேர்மையாகவும் உண்மையாகவும் மனிதப் பண்புடனும் பரிபூரண இதயசுத்தியுடனும் உழைக்கும் தலைவர்களிடமிருந்து நம் நாட்டின் அரசியலை ஒளிரச் செய்வதற்கு இந்தத் தீபாவளியின் தீபம் காரணமாக அமையுமென்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபம் ஔிரட்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT