Wednesday, May 15, 2024
Home » சுகாதாரத் துறை சிக்கல்களுக்கு தீர்வு; புதிய சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அழைப்பு

சுகாதாரத் துறை சிக்கல்களுக்கு தீர்வு; புதிய சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அழைப்பு

by Rizwan Segu Mohideen
October 27, 2023 6:49 am 0 comment

சுகாதாரத் துறையில் தற்போது நிலவும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய சாலைகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இன்று கொழும்புக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தீர்மானித்துள்ளார்.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொள்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

பிரதான வைத்தியசாலைகள் உட்பட பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஏனைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நிலவும் கட்டடங்களின் பராமரிப்புக்கான தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்ளுதல், நிலவும் பொருளாதார நெருக்கடியில் நிதியை முகாமைத்துவம் செய்து சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், புதிய தரவுத் தொகுதியில் நிலவும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு விரைவான தீர்வு கண்டு அதனை சேவையில் இணைத்துக் கொள்ளுதல், டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தல், அதற்காக மேற்கொள்ள வேண்டிய முறைமை மற்றும் நுளம்பு உருவாகும் இடங்களை இனம் கண்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், தாய் – சேய் போசணை தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்தல், வைத்தியசாலைகளில் காணப்படும் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களில் நிலவும் சிக்கல்களை நிவர்த்தி செய்து விரைவாக நோயாளர்களுக்கான சிகிச்சைகளுக்காக அதனை இணைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளன.

அத்துடன் வெளிநாடுகளில் பயிற்சிக்காக மற்றும் தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரின் இடத்திற்கு உரியவர்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்தல், ஆஸ்பத்திரிகளில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பில் ஆராய்தல், தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குதல், நோயாளர்களை இனங்காணும் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்தல் மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முறையாக முன்னெடுப்பதற்காக ஊழியர்களை இணைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய சுகாதார அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரின் காலத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அந்த பேச்சு வார்த்தைகளில்

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT