Wednesday, May 8, 2024
Home » இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி

இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி

- பாகிஸ்தான் அணியை பின்தள்ளி 7ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

by Rizwan Segu Mohideen
October 26, 2023 7:23 pm 0 comment

– இங்கிலாந்து 8ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு

2023 கிரிக்கெட் உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய தினம் (26) இந்தியாவின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 43 (73) ஓட்டங்களை அதிக கூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தார்.

ஜொன்னி பெயர்ஸ்டோ 30 (31) ஓட்டங்களையும், டேவிட் மாலன் 28 (25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 3 விக்கெட்டு களையும், கசுன் ராஜித, அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Image

பதிலுக்கு 157 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இங்கிலாந்து அணியை இலகுவாக வெற்றியீட்டியது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிக்காது 77 (83) ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 65 (54) ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க 1,000 ஒரு நாள் சர்வதேச ஓட்டங்கைள கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

போட்டியின் நாயகனாக லஹிரு குமார தெரிவானார்.

அந்த வகையில், தற்போது அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில் 7ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, இப்போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை பின்தள்ளி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அத்துடன், 8ஆவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி, 9ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் 4 இடங்களிலும் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

England (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c de Silva b Rajitha 30 31 64 3 0 96.77
c †Mendis b Mathews 28 25 32 6 0 112.00
run out (Mathews/†Mendis) 3 10 14 0 0 30.00
c sub (MADI Hemantha) b Kumara 43 73 98 6 0 58.90
c †Mendis b Kumara 8 6 6 1 0 133.33
lbw b Kumara 1 6 9 0 0 16.66
c Perera b Mathews 15 15 33 1 0 100.00
c Samarawickrama b Rajitha 0 4 8 0 0 0.00
not out 14 17 34 1 1 82.35
run out (†Mendis) 2 7 7 0 0 28.57
st †Mendis b Theekshana 5 6 6 1 0 83.33
Extras (lb 3, w 4) 7
TOTAL 33.2 Ov (RR: 4.68) 156
Fall of wickets: 1-45 (Dawid Malan, 6.3 ov), 2-57 (Joe Root, 9.4 ov), 3-68 (Jonny Bairstow, 13.2 ov), 4-77 (Jos Buttler, 14.5 ov), 5-85 (Liam Livingstone, 16.6 ov), 6-122 (Moeen Ali, 24.4 ov), 7-123 (Chris Woakes, 25.5 ov), 8-137 (Ben Stokes, 30.1 ov), 9-147 (Adil Rashid, 31.5 ov), 10-156 (Mark Wood, 33.2 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
5 0 37 0 7.40 18 7 0 0 0
7 0 36 2 5.14 25 5 0 1 0
8.2 1 21 1 2.52 36 1 0 3 0
5 1 14 2 2.80 17 0 0 0 0
7 0 35 3 5.00 25 4 1 0 0
1 0 10 0 10.00 2 2 0 0 0
Sri Lanka  (T: 157 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
not out 77 83 110 7 2 92.77
c Stokes b Willey 4 5 8 1 0 80.00
c †Buttler b Willey 11 12 15 2 0 91.66
not out 65 54 84 7 1 120.37
Extras (w 3) 3
TOTAL 25.4 Ov (RR: 6.23) 160/2

Did not bat: 

Fall of wickets: 1-9 (Kusal Perera, 1.5 ov), 2-23 (Kusal Mendis, 5.2 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
6 0 30 0 5.00 21 4 0 2 0
5 0 30 2 6.00 18 5 0 1 0
4.4 0 39 0 8.35 9 1 3 0 0
4 0 23 0 5.75 12 3 0 0 0
3 0 17 0 5.66 8 2 0 0 0
3 0 21 0 7.00 5 2 0 0 0
Rizwan Segu Mohideen

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT