அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட, டீன்ஸ் ஸ்டார் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டித்தொடரில் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் விளையாட்டு கழகம் கிண்ணத்தை கைப்பற்றியது.
அக்கரைப்பற்று பதுர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் (17) நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் அணியும் பள்ளிக்குடியிருப்பு றஹிமீய்யா அணியும் மோதின. இச்சுற்றுத்தொடரின் சிறப்பாட்டக்காராக றஹிமீய்யா அணியின் முஹம்மட் நஜாத் தெரிவு செய்யப்பட்டதோடு, இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக லோர்ட்ஸ் அணியின் இல்ஹாம் அஹமட் மற்றும் சுற்றுத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக முஹம்மட் ஹாதில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்