Saturday, May 11, 2024
Home » பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம்

by Prashahini
October 17, 2023 10:20 am 0 comment

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

நசீர் அஹமட்டின் இடத்திற்கு மு.கா. எம்.பியாக அலி ஸாஹிர் மௌலானா

நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT